Wednesday, 24 July 2013

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியையின் சொத்துகள் பறிமுதல்?

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியையின் சொத்துகள் பறிமுதல்? புதுடில்லி:பீகாரில், மதிய உணவு சாப்பிட்டு, 23 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சொந்தமான சொத்துகளை, பறிமுதல் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவில், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு கலந்திருந்ததை, தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். கெட்டுப்போன பொருட்கள்: பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சரண் மாவட்டத்தில், தர்மாசதி கண்டேவான் என்ற கிராமத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 15ம் தேதி, பெரும் துயரச் சம்பவம் நடந்தது. அங்கு மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், திடீரென மயங்கி விழுந்தன.இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 23 குழந்தைகள், பரிதாபமாக இறந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், "கெட்டுப் போன அரிசி மற்றும் எண்ணெயை பயன்படுத்தி, உணவு சமைக்கப்பட்டதே, இந்த விபரீதத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியை, மீனா தேவியை விசாரிப்பதற்காக, போலீசார் தேடினர். அவர் தலைமறைவாகி விட்டார். சமைப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்த, அவரது கணவரும் தலைமறைவாகி விட்டார். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment